கோட்டாபயவை ஆட்சிபீடம் ஏற்ற உதவினாரா கர்தினால்:வெடித்தது புதிய சர்ச்சை

Gotabaya Rajapaksa Cardinal Malcolm Ranjith Easter Attack Sri Lanka
By Sumithiran Sep 06, 2023 07:38 PM GMT
Report

"அதிபர் தேர்தலில் நான் கோட்டாபயவிற்கு வாக்களிக்குமாறு கேட்கவில்லை.சஜித்துக்கும் அநுரவுக்கும் வாக்களிக்குமாறு கேட்கவில்லை.கோட்டாபயவிற்காக நான் வேலை செய்தேன் என்ற கட்டுக்கதையை ஆரம்பித்தது ஒரு சக்திவாய்ந்த கத்தோலிக்க அமைச்சர்.அன்றும் இன்றும் சொல்கின்றேன். நான் சொல்லவில்லை."

இவ்வாறு தெரிவித்தார் பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பு பேராயர் இல்லத்தில் இன்று (06) செய்தியாளர் மாநாட்டை நடத்தும் போதே,அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித்,

குண்டு வெடிப்பு விவகாரம்: ரணிலை வலியுறுத்தும் கர்தினால்

குண்டு வெடிப்பு விவகாரம்: ரணிலை வலியுறுத்தும் கர்தினால்

சுதந்திரமான சர்வதேச விசாரணைக் குழு

கோட்டாபயவை ஆட்சிபீடம் ஏற்ற உதவினாரா கர்தினால்:வெடித்தது புதிய சர்ச்சை | Statement From Cardinal About The Channel 4 Video

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக சனல் 4 ஒளிபரப்பிய காணொளி மூலம் வெளிப்படுத்தப்பட்ட உண்மைகளை விசாரிக்க சுதந்திரமான சர்வதேச விசாரணைக் குழுவொன்றை நியமிக்க வேண்டும் 

அவ்வாறான விசாரணையின் பின்னரே அது தொடர்பான காணொளியின் உள்ளடக்கங்களை ஏற்றுக் கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

"சனல் 4 க்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். சனலின் பழைய நடத்தை எங்களுக்கு முக்கியம் அல்ல. எங்கள் பிரச்சினையில் முன்வைக்கப்படும் உண்மைகள்தான் முக்கியம். உடனடியாக என்ன செய்ய வேண்டும்.

உண்மைகள் குறித்து பாரபட்சமற்ற வெளிப்படையான விசாரணையைத் தொடங்குங்கள். மற்றும் சனல் 4 முன்வைக்கும் நபர்கள் தொடர்பில் சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்.

ஈஸ்டர் குண்டு வெடிப்பு விவகாரம்: மகிந்தவின் மகன் வெளியிட்ட தகவல்

ஈஸ்டர் குண்டு வெடிப்பு விவகாரம்: மகிந்தவின் மகன் வெளியிட்ட தகவல்

சனல் 4 வழங்கிய அறிக்கை

கோட்டாபயவை ஆட்சிபீடம் ஏற்ற உதவினாரா கர்தினால்:வெடித்தது புதிய சர்ச்சை | Statement From Cardinal About The Channel 4 Video

ஊடகவியலாளர் - ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக சனல் 4 வழங்கிய அறிக்கையை ஏற்றுக்கொள்கிறீர்களா இல்லையா?

"விசாரணைக்குப் பிறகு அதை ஏற்கத் தயார். விசாரணையின்றி ஏற்கமாட்டேன்."

ஊடகவியலாளர் - கேள்விக்குரிய சனல் 4 காணொளியில் உங்கள் நேர்காணல் உள்ளன. ஒரு கட்டத்தில் இது அதிகாரத்தைப் பெறுவதற்கான சதி என்று சொல்கிறீர்கள். அரசாங்கத்தின் பலம் வாய்ந்தவர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர் என்று உங்கள் வார்த்தைகளில் கூறப்பட்டுள்ளது. இந்த காணொளியில் வெளியாகியுள்ள உண்மைகளுக்கு மேலதிகமாக, நீங்கள் எந்த அடிப்படையில் அந்த தகவலை வெளியிட்டீர்கள்? மேலும் தகவல் தெரியுமா?

"முதலில் இது சர்வதேச சதி என்று நினைத்தேன். பிறகு மனம் மாறினேன். அரசு மெத்தனப் போக்கை எடுத்தது. இவர்களுக்குள் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்தது. பின்னர் இது சதி என்று பொது உணர்வு கூறத் தொடங்கியது. அதிபர் ஆணைக்குழுவின் அறிக்கையின் உண்மைகளும் சந்தேகங்களை எழுப்பியுள்ளன.

ஊடகவியலாளர் - அண்மைய செய்தியாளர் மாநாட்டில் பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தாக்குதல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் குறித்து தெரிவித்திருந்த நிலையில், நீங்கள் குற்றச்சாட்டுக்களை மாத்திரமே முன்வைக்கின்றீர்கள். அவற்றைப் பற்றி விளக்கமளிக்க அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. தயவு செய்து மற்ற தகவல்களை தெரிவிக்கவும்.

"அறிக்கையில் 70,000 பக்கங்கள் உள்ளன, நான் அதை இன்னும் படித்து வருகிறேன், நாங்கள் எப்படி வாய்ப்பு கொடுப்பது? அந்த அமைச்சரை நம்பலாமா?"

கோட்டாபய ராஜபக்சவிற்கு  ஆதரவு

கோட்டாபயவை ஆட்சிபீடம் ஏற்ற உதவினாரா கர்தினால்:வெடித்தது புதிய சர்ச்சை | Statement From Cardinal About The Channel 4 Video

ஊடகவியலாளர் - நேற்றைய தினம் அமைச்சர் மனுஷ நாணயக்கார, நீங்கள் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவிற்கு ஆதரவளித்ததாக தெரிவித்தாரே?

“நேற்று எதிர்க்கட்சித் தலைவர், அவருக்கு எதிராக வாக்களிக்கச் சொன்னேன் என்று ஒரு அறிக்கை வெளியிட்டார், நான் எங்கும் அப்படிச் சொல்லவில்லை, அப்படிச் சொன்ன ஒரு கதையைக் காட்டுமாறு சவால் விடுகிறேன். தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கையளிக்கப்பட்ட பின்னர், மூன்று வேட்பாளர்கள் பேராயர் மண்டபத்திற்கு வர அனுமதிக்கப்படவில்லை.நான் கோட்டாபயவிற்கு வாக்களிக்குமாறு கேட்கவில்லை.சஜித்துக்கும் அநுரவுக்கும் வாக்களிக்குமாறு கேட்கவில்லை.கோட்டாபயவிற்காக நான் வேலை செய்தேன் என்ற கட்டுக்கதையை ஆரம்பித்தது ஒரு சக்திவாய்ந்த கத்தோலிக்க அமைச்சர்.அன்றும் இன்றும் சொல்கின்றேன். நான் சொல்லவில்லை."

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி