குண்டு வெடிப்பு விவகாரம்: ரணிலை வலியுறுத்தும் கர்தினால்

Easter Sri Lanka Sri Lankan Peoples Cardinal Malcolm Ranjith Easter Attack Sri Lanka
By Dilakshan Sep 06, 2023 03:02 PM GMT
Report

இலங்கையில் 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு சதித்திட்டம் குறித்து 'சுதந்திரமான, பக்கச்சார்பற்ற, நீதியான, வெளிப்படையான மற்றும் பரந்த' விசாரணையை நடத்துமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்கவையும் அரசாங்கத்தையும்  மல்கம் கர்தினால் ரஞ்சித் வலியுறுத்தியுள்ளார்.

இன்று(06) அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் விடுத்த குறித்த செய்தி குறிப்பில், “பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் இருந்து நீக்கப்பட்டு, இடமாற்றம் செய்யப்பட்ட அனைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்கள (சிஐடி) அதிகாரிகளின் உதவியுடன் சுதந்திரமான சர்வதேச புலனாய்வுக் குழுவின் ஊடாக இந்த விசாரணை நடத்தப்பட வேண்டும்.

கோட்டாபயவின் பேரில் அரங்கேறிய இன்னொரு கொடூரம்: சனல் 4 இல் அம்பலமாகும் அடுத்த தகவல் (காணொளி)

கோட்டாபயவின் பேரில் அரங்கேறிய இன்னொரு கொடூரம்: சனல் 4 இல் அம்பலமாகும் அடுத்த தகவல் (காணொளி)


விசாரணை

ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட பல்வேறு ஆணைக்குழு அறிக்கைகளில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள கண்டுபிடிப்புகள் மற்றும் இன்னும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய பரிந்துரைகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.

குண்டு வெடிப்பு விவகாரம்: ரணிலை வலியுறுத்தும் கர்தினால் | Easter Bomb Blast Kardhinal Ranil Wikrama Singha

நாட்டில் பாதுகாப்பின்மையை உருவாக்க சதித்திட்டம் தீட்டப்பட்டதாக சனல் 4 அம்பலப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும், மற்றும் 'இந்த படுகொலையில் அவர்களின் பங்கு' விரிவாக ஆராயப்பட வேண்டும்.

இந்த புதிய விசாரணைகள் சுதந்திரமானதாக இருக்க வேண்டும் என்பதால், விசாரணையின் சுதந்திரம் மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக, விசாரணையின் கீழ் வரும் காவல்துறை மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் தற்போது உயர் பதவிகளில் உள்ளவர்கள் அனைவரையும் உடனடியாக இடைநீக்கம் செய்ய வேண்டும்

அதேபோன்று, ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் போது கடமைகளை தவறியமைக்காகப் புறக்கணித்த குற்றத்திற்காக உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு அபராதம் விதிக்கப்பட்ட காவல்துறை மா அதிபர் நிலாந்த ஜயவர்தன மற்றும் இந்த அட்டூழியத்தின் போது கடமையை புறக்கணித்த பிரதி காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோர் அதிபர் விசாரணை ஆணைக்குழுவினால் மேற்கோள் காட்டப்பட்டுள்ளனர்.

ஒழுக்காற்று நடவடிக்கைக்காக இருவரும் புதிய விசாரணை முடியும் வரை சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட வேண்டும்

சனல் 4 வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் ஆவணப்படம்! உடைக்கப்பட்ட ஈஸ்டர் தாக்குதல் உண்மைகள்

சனல் 4 வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் ஆவணப்படம்! உடைக்கப்பட்ட ஈஸ்டர் தாக்குதல் உண்மைகள்


வெளிப்படையான, நேர்மையான விசாரணை

சனல் 4  குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஆராய நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை (PSC) நியமிக்கும் திட்டம் குறித்து அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் அறிவிப்பானது, இது பொது நிதியையும் நேரத்தையும் வீணடிக்கும் செயல், மக்களை தவறாக வழிநடத்தும் செயற்பாடு, குண்டுவெடிப்பு நடந்த உடனேயே விசாரணை நடத்த பிசிஓஐ மற்றும் பிஎஸ்சி நியமனம் செய்யப்பட்ட போதிலும், இந்தக் குழுக்கள் அளித்த பரிந்துரைகள் மீது அரசியல் அதிகாரிகள் நம்பகமான, நேர்மறையான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை .

குண்டு வெடிப்பு விவகாரம்: ரணிலை வலியுறுத்தும் கர்தினால் | Easter Bomb Blast Kardhinal Ranil Wikrama Singha

"இந்த காரணத்திற்காக, நாங்கள் அத்தகைய மூலோபாயத்தை அங்கீகரிக்கவில்லை மற்றும் அந்த திட்டத்தை முற்றிலும் நிராகரிக்கிறோம்."

வெளிப்படையான, நேர்மையான விசாரணை தொடங்கப்படாவிட்டால், ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையும் நீதியும் என்றும் கிடைக்காது.

வெறும் வாக்குறுதிகளை நாங்கள் நம்பவில்லை, ஆனால் எங்களுக்கு நடவடிக்கை தேவை, அது முற்றிலும் சுதந்திரமான, வெளிப்படையான மற்றும் சர்வதேச அளவில் கண்காணிக்கப்பட வேண்டும்.

குண்டுவெடிப்புகளுக்குப் பின்னால் உள்ள சதித்திட்டம் குறித்து உலகளவில் கவனம் செலுத்துவதற்கு சனல் 4 தொலைக்காட்சி வலையமைப்பு எடுத்த ஆர்வம் மற்றும் சிரமத்திற்கு  நன்றி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

"இஸ்லாமிய மத சிந்தனையின்படி தாக்குதல் நடத்தப்பட்டது : சரத் வீரசேகரவின் உரைக்கு கண்டனம்!

"இஸ்லாமிய மத சிந்தனையின்படி தாக்குதல் நடத்தப்பட்டது : சரத் வீரசேகரவின் உரைக்கு கண்டனம்!


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி