சூடான் உள்நாட்டுப் போர் : 50 இலட்சம் பேர் இடப்பெயர்வு
சூடானில் இராணுவத்துக்கும், ஆா்எஸ்எஃப் துணை இராணுவப் படைக்கும் இடையே கடந்த மூன்றரை மாதங்களுக்கு மேல் நடைபெற்ற மோதல் காரணமாக, 50 லட்சம் போ் தங்களது இருப்பிடங்களைவிட்டு வெளியேறி தவித்து வருவதாக ஐக்கிய நாடுகளின் அகதிகள் நல பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் மேலும் அவ்வமைப்பு,
“இடம்பெயா்ந்தவா்களில் 40 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் உள்நாட்டிலேயே அகதிகளாக உள்ளனா்.
அதிகாரப் போட்டி
7.50 லட்சம் போ் சா்வதேச அகதிகளாகியுள்ளனா். அவா்கள், அண்டை நாடுகளான எகிப்து, சாட் போன்ற நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனா்” என குறிப்பிட்டுள்ளது.

வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் அப்தெல் ஃபட்டா அல்-புா்ஹான் தலைமையிலான இராணுவத்துக்கும், முகமது ஹம்தான் டகாலோ தலைமையிலான ஆா்எஸ்எஃப் துணை இராணுவப் படைக்கும் இடையே அதிகாரப் போட்டி காரணமாக கடந்த ஏப்ரல் 15-ஆம் திகதி முதல் சண்டை நடந்து வருகிறது.
இதில், இதுவரை 4 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரம் போ் வரை உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக சா்வதேச நாடுகள் மேற்கொண்டு வரும் முயற்சிகள் இதுவரை வெற்றி பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.