கனடாவில் முள்ளிவாய்க்கால் நினைவிடம் சேதம் : சந்தேக நபர் கைது
கனடாவின் பிரெம்ரன் நகரின் சிங்குவாகூசி பூங்காவில் உள்ள முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நினைவிடத்தில் இழிவான வாசகங்களை தீந்தைமூலம் எழுதி அதனை சேதப்படுத்திய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐயாயிரம் டொலருக்கு மேலான சேதப்படுத்தல் செலவீனம் உட்பட இரண்டு குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட குறித்த 14 வயது சிறுவன் விரைவில் ஒன்ராறியோ நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது
சிறுவன் கைது
நினைவிடம் சேதப்படுத்தப்பட்டதாக கிட்டிய முறையீடுகளை அடுத்து சிங்குவாகூசி பூங்காவிற்கு சென்ற காவற்துறை குறித்த சேதத்தை உறுதிசெய்ததுடன் உடனடியாக இந்த விசாரணையை வெறுப்புக் குற்றப் பிரிவிடம் ஒப்படைத்த நிலையில் விசாரணைக்குப்பின்னர் பிராம்ப்டனைச் சேர்ந்த குறித்த சிறுவன் செய்யப்பட்டிருந்தார்.

எனினும் கனடாவின் இளைஞர் குற்றவியல் நீதிச் சட்டத்தின் கீழ் சிறார் சந்தேக நகர்களின் பெயர்களை வெளியிட முடியாது என்பதால் குற்றம் சாட்டப்பட்ட நபரின் அடையாளம் வெளிப்படுத்தப்படவில்லை
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஆனந்தபுரம் ஈழத்தமிழரின் வீரமும் ஓர்மமும் ஒன்றாக விளையாடிய இறுதிக்களம் 13 மணி நேரம் முன்