யாழில் கைதான இந்திய கடற்றொழிலாளர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
Indian fishermen
Jaffna
Law and Order
By Theepan
யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்பில் கடந்த 3ஆம் திகதி ஒரு படகுடன் கைதான 9 இந்திய கடற்றொழிலாளர்களுக்கு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குறித்த வழக்கு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (31) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதவான், படகின் ஓட்டுநரான கடற்றொழிலாளருக்கு 10 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட 6 மாத சிறைத்தண்டனையும், 4 மில்லியன் ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார்.
சிறைத்தண்டனை விதிப்பு
அத்துடன், அபராதத்தைச் செலுத்தத் தவறினால், மேலும் 3 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

மேலும், படகில் இருந்த ஏனைய 8 கடற்றொழிலாளர்களுக்கும் 10 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி நீதவான் தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி