யாழில் வாள்வெட்டு! யாழ் மற்றும் கிளிநொச்சியை சேர்ந்த ஐவர் கைது
வன்முறைக் கும்பல் ஒன்றைச் சேர்ந்தவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருட்டு உந்துருளியை பயன்படுத்தியே இந்த வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றது என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறை பிரிவினரே இந்தக் கைது நடவடிக்கையை நேற்று சனிக்கிழமை முன்னெடுத்தனர்.
கடந்த 17ஆம் திகதி மாலை 6.30 மணியளவில் சண்டிலிப்பாய் தொட்டிலடிச் சந்தியில் வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றது. 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேரே இந்த தாக்குதலை மேற்கொண்டுவிட்டுத் தப்பித்தனர்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த காவல்துறை அத்தியட்சகர் கீழான மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
அதனடிப்படையில் கட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த இருவர், தெல்லிப்பழையைச் சேர்ந்த இருவர் மற்றும் கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவர் என ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் பயன்படுத்திய இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் பெரிய சப்பரம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 நாள் முன்
