கனடாவில் பேருந்தில் பெண்களிடம் சில்மிஷம் -61 வயதான தமிழர் சிக்கினார்
Sexual harassment
Canada
By Jaso
கனடாவில் ஓடும் பேருந்தில் பெண்களிடம் சில்மிஷம் செய்த தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வோகன் நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சௌந்தர் வேலுசாமி என்ற 61 வயதானவர் மீதே இந்த குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது.
நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகள்

கடந்த 9ஆம் திகதி இந்த சம்பவம் யோர்க் பிராந்திய பேருந்தில் நிகழ்ந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலும் சந்தேக நபர் கடந்த வெள்ளிக்கிழமை கைதாகியுள்ளார். இவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நீதிமன்றில் நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.