ஸ்டாலின் - ரஜினி சந்திப்புக்கு பின்னர் தமிழக அரசியலில் மாறிய காட்சிகள்

Rajinikanth Vijay M K Stalin BJP
By Jaso May 07, 2026 04:15 PM GMT
Report

தமிழகத்தில் நடந்து முடிந்த 17-வது சட்டசபை தேர்தலில், யாருக்கும் பெரும்பான்மை (118 தொகுதிகளில் வெற்றி) கிடைக்காததால், இன்னும் ஆட்சி அமைக்கப்போவது யார் என்பது முடிவாகாமல் இருக்கிறது.

தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றிய த.வெ.க.வுக்கு, தி.மு.க.வுடன் கைகோர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்துள்ள போதும், பெரும்பான்மை இன்னும் கிடைக்கவில்லை.

அதாவது, த.வெ.க. பெற்ற 108 தொகுதிகளுடன், காங்கிரஸ் கட்சி பெற்ற 5 இடங்களை சேர்த்தால், 113 தொகுதிகள் தான் வருகிறது. இன்னும் 7 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது.

சந்திப்புக்கு பின்னர்  மாறிய காட்சிகள்

 இதுபோன்ற சூழ்நிலையில், தமிழ்நாட்டின் 12-வது முதல்-அமைச்சராக விஜய் பதவியேற்பாரா? என்று எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

ஸ்டாலின் - ரஜினி சந்திப்புக்கு பின்னர் தமிழக அரசியலில் மாறிய காட்சிகள் | Tamil Nadu Politics Changed Stalin Rajini Meeting

அதாவது, ஆட்சி மாறும் என்று அனைவரும் காத்திருந்த நிலையில், நேற்று ரஜினிகாந்த், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சென்று சந்தித்த பிறகு, தமிழக அரசியலில் காட்சிகள் மாறத் தொடங்கின என இந்திய ஊடகமொன்று விரிவான தகவலை வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ரஜினி- ஸ்டாலின் சந்திப்பின்போது, "இக்கட்டான சூழ்நிலையிலும் உங்களுடன் இருப்பேன்" என்று ரஜினிகாந்த், மு.க.ஸ்டாலினிடம் கூறியதாக தகவல்கள் பரவியது.

விஜய்யின் ஆட்சிக்கு ஏழாம்பொருத்தமாக மாறியுள்ள அர்லேகர்

விஜய்யின் ஆட்சிக்கு ஏழாம்பொருத்தமாக மாறியுள்ள அர்லேகர்

 பா.ஜ.க.வுக்கு பேரதிர்ச்சி

இதற்கிடையே, த.வெ.க. ஆட்சியமைக்க காங்கிரஸ் நிபந்தனையுடன் ஆதரவு அளித்தது. த.வெ.க. - காங்கிரஸ் கைகோர்த்தது, தி.மு.க. - அ.தி.மு.க.வுக்கு அதிர்ச்சி அளித்ததோ இல்லையோ, பா.ஜ.க.வுக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது.

ஸ்டாலின் - ரஜினி சந்திப்புக்கு பின்னர் தமிழக அரசியலில் மாறிய காட்சிகள் | Tamil Nadu Politics Changed Stalin Rajini Meeting

தமிழகத்தில் கடும் பின்னடைவை சந்தித்த காங்கிரஸ், மீண்டு எழுவதை பா.ஜ.க.வால் ஜீரணிக்க முடியவில்லை. உடனேயே, விஜய்யை பா.ஜ.க. தரப்பில் இருந்து தொடர்பு கொண்டு, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டாம். உங்களின் பெரும்பான்மை பலத்துக்கு அ.தி.மு.க. ஆதரவு தருவார்கள் என்று கூறியதாக தெரிகிறது.ஆனால், இதை விஜய் ஏற்றுக்கொள்ளவில்லையாம்.

அதன்பிறகே, மு.க.ஸ்டாலின் - ரஜினிகாந்த் சந்திப்பு நடந்திருக்கிறது. இந்த சந்திப்புக்கு இடையே ரஜினிகாந்த், டெல்லியில் உள்ள முக்கிய தலைவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினாராம். அதன்பிறகு, அந்த முக்கிய தலைவர் மு.க.ஸ்டாலினிடமும் பேசினாராம். அதன்பிறகுதான், தமிழக அரசியலில் காட்சிகள் மாறத் தொடங்கி இருக்கின்றன.

கரூர் வழக்கின் மீது திரும்பும் இந்திய அரசின் நகர்வு! விஜய்க்கு பாரிய சவால்

கரூர் வழக்கின் மீது திரும்பும் இந்திய அரசின் நகர்வு! விஜய்க்கு பாரிய சவால்

மறுப்பு தெரிவித்த ஆளுநர்

விஜய் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க கோரியபோது, அதற்கு அவர் மறுத்துவிட்டார். முதலில், பெரும்பான்மையை நிரூபியுங்கள் என்று அவர் கூறிவிட்டதாக சொல்லப்பட்டது. அதன்பிறகே, இன்று காலை நடைபெற இருந்த விஜய்யின் பதவியேற்பு விழா ஒத்திவைக்கப்பட்டது.

ஸ்டாலின் - ரஜினி சந்திப்புக்கு பின்னர் தமிழக அரசியலில் மாறிய காட்சிகள் | Tamil Nadu Politics Changed Stalin Rajini Meeting

விஜய்க்கு ஆதரவு தர முன்வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி, இரு கம்யூனிஸ்ட் கட்சிகளை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தடுத்து நிறுத்திவிட்டார். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு சென்னையிலேயே தங்கியிருக்க உத்தரவிட்டார்.

சி.வி.சண்முகம் தலைமையில் தனி வழி

இதற்கிடையே, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் 17 அ.தி.மு.க. வெற்றி வேட்பாளர்கள் புதுச்சேரியில் உள்ள விடுதியில் தங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால், அ.தி.மு.க.விலும் பிளவு ஏற்பட்டுள்ளதாக பரபரப்பாக பேசப்படுகிறது.

ஸ்டாலின் - ரஜினி சந்திப்புக்கு பின்னர் தமிழக அரசியலில் மாறிய காட்சிகள் | Tamil Nadu Politics Changed Stalin Rajini Meeting

சி.வி.சண்முகம் தலைமையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள், விஜய்க்கு ஆதரவு தெரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மொத்தத்தில், தமிழக அரசியல் நிகழ்வு நொடிக்கு நொடி மாறிக் கொண்டே இருக்கிறது.

ஆட்சி அமைக்கப்போவது யார்? என்பது முடிவாகும் வரை நிலைமை இதுபோன்று பரபரப்பாகத்தான் இருக்கும் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பான்மை கட்டாயம் நிரூபிக்க வேண்டும்! விஜய்க்கு பேரிடியான தமிழ்நாடு ஆளுநரின் பதில்

பெரும்பான்மை கட்டாயம் நிரூபிக்க வேண்டும்! விஜய்க்கு பேரிடியான தமிழ்நாடு ஆளுநரின் பதில்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026