எங்கள் விடிவுக்காக எம் வீடுகள் தோறுமிருந்து போராளிகள் புறப்பட்டனர்; தென்னிலங்கையில் தீபச்செல்வன்

Matara Sri Lanka Sri Lankan Peoples
By Independent Writer May 03, 2026 10:31 AM GMT
Report
Courtesy: Theepaselvan

வடக்கின் பிள்ளைகளை பயங்கரவாதிகள் என்று கடந்த ஆட்சியாளர்கள் மக்களுக்கு சொல்லிக் கொடுத்துள்ளதாக ஈழ எழுத்தாளர் தீபச்செல்வன் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், எங்கள் தேசத்திற்காகப் போராடிய தமிழ் மக்களின் பிள்ளைகளை சிங்கள மக்கள் புரிந்துகொள்ளுகின்ற, ஏற்றுக்கொள்ளுகின்ற நிலை என்று உருவாகிறதோ அன்று சமதானம், நல்லிணக்கம், உரிமைப் பரிமாற்றம் என்பன இடம்பெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மாத்தறை மாவட்டத்தின் அக்மண பிரதேச சபையின் வாசகர் சமூகத்தின் ஏற்பாட்டில் தீபச்செல்வனின் எழுத்துக்கள் குறித்து நடந்த இலக்கிய நிகழ்வு கடந்த ஏப்ரல் 30ஆம் திகதி நடைபெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அமெரிக்கா தடைக்கு எதிராக முதல் முறையாக தடுப்பு உத்தரவை பிறப்பித்த சீனா

அமெரிக்கா தடைக்கு எதிராக முதல் முறையாக தடுப்பு உத்தரவை பிறப்பித்த சீனா

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு

தீபச்செல்வன் தன்னுடைய உரையில் மேலும் தெரிவித்ததாவது, ''வீட்டுக்கு வீடு வாசல் படி என்பது தமிழில் உள்ள பழமொழி. ஆனால் எங்கள் வீடுகள் ஒவ்வொன்றிலும் எங்கள் விடுதலைக்காகவும் உரிமைக்காகவும் போராடி இறந்திருக்கிறார்கள்.

எங்கள் விடிவுக்காக எம் வீடுகள் தோறுமிருந்து போராளிகள் புறப்பட்டனர்; தென்னிலங்கையில் தீபச்செல்வன் | The Fighters Set Out From Our Homes To Liberate Us

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் மாவீரனைப் பற்றிய என்னுடைய நடுகல் நாவல் நான்கு பதிப்புக்களை கண்டிருப்பது சிங்கள மக்கள் எங்கள் வீட்டுப் பிள்ளைகளை ஏற்றுக்கொண்டிருப்பதன் வெளிப்பாடு என்று நான் நம்புகிறேன்.

குறிப்பாக சிங்கள எழுத்தாளர்கள் அண்மைய நெருக்கடித் தருணத்தில் சரியான வகையில் உடனிருந்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்" என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அக்மண பிரதேச சபை தவிசாளரும் பேராதனை பல்கலைக்கழக முன்னாள் மாணவர் ஒன்றியத் தலைவருமான ரங்கன செனிவிரத்தின தொடக்க உரையை ஆற்றினார்.

எரிபொருள் விலை அதிகரிப்பு : பேருந்து கட்டணம் குறித்து வெளியான அறிவிப்பு

எரிபொருள் விலை அதிகரிப்பு : பேருந்து கட்டணம் குறித்து வெளியான அறிவிப்பு

சிங்களத்தில் வெளியான தீபச்செல்வனின் படைப்புக்கள்

நடுகல் நாவல் பற்றியும் அதில் வரும் மாவீரன் வெள்ளையன் பற்றியும், தலைவர் பற்றியும் மற்றும் போராளிகள் பற்றியும் மிகவும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்தார்.

எங்கள் விடிவுக்காக எம் வீடுகள் தோறுமிருந்து போராளிகள் புறப்பட்டனர்; தென்னிலங்கையில் தீபச்செல்வன் | The Fighters Set Out From Our Homes To Liberate Us

சிங்கள எழுத்தாளர்களான திலீனா வீரசிங்க மற்றும் சம்மாணி விஜேசிங்க ஆகியோரும் சிங்களத்தில் வெளியான தீபச்செல்வனின் படைப்புக்கள் குறித்துப் பேசினர். அனுஷா சிவலிங்கம் தீபச்செல்வனின் நான் சிறிலங்கன் இல்லை என்ற கவிதையைக் குறித்துப் பேசி அதனை வாசித்துக் காட்டினார்.

நிகழ்வில் கலந்து கொண்ட சரத் பிரேமதிலக சிறந்த கருத்துரை ஒன்றை வழங்கினார். பின்னர் அண்மைய புத்தக தடை பற்றியும் அரசுக்கு எதிராகப் பலரும் கருத்துத் தெரிவித்தனர்.

நிகழ்வை பிரசாத் துசித தொகுப்புச் செய்ததோடு, அக்மண பிரதேச சபையின் ஒழுங்கமைப்பில் எழுத்தாளர்கள், கலைஞர்கள், வாசகர்கள், இளையவர்கள் என நிகழ்வில் மண்டபம் நிறைந்தளவில் மக்கள் கலந்து கொண்டிருந்தனர். 

எரிபொருள் விலை உயர்வு - முச்சக்கர வண்டி கட்டணத்தை அதிகரிக்க கோரிக்கை

எரிபொருள் விலை உயர்வு - முச்சக்கர வண்டி கட்டணத்தை அதிகரிக்க கோரிக்கை

120 வெளிநாட்டவர்கள் அதிரடி கைது! வெளியாகிய பெரும் மோசடி பின்னணி

120 வெளிநாட்டவர்கள் அதிரடி கைது! வெளியாகிய பெரும் மோசடி பின்னணி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026