காசா எல்லை இஸ்ரேல் இராணுவ வசம்
Israel
Israel-Hamas War
By Sumithiran
a year ago
இஸ்ரேல் பலஸ்தீன போர் உக்கிரம் பெற்றுள்ளது. இஸ்ரேல் இராணுவம் நடத்திவரும் கொடூர தாக்குதல்களால் காசா நிலப்பகுதி அதிர்ந்த வண்ணம் உள்ளது.
நேற்றிரவு மட்டும் 500 தடவை தாக்குதல் நடத்தியுள்ளது இஸ்ரேல்.
காசா எல்லை இஸ்ரேல் இராணுவம் வசம்
இதனிடையே காசா எல்லையை தனது கட்டுப்பாட்டுக்குள் இஸ்ரேல் இராணுவம் கொண்டு வந்துள்ளது.
ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் குண்டு மழை பொழிந்து வருகிறது. காசா எல்லையை முற்றிலுமாக இஸ்ரேல் முடக்கியது. உணவு, எரிபொருள் விநியோகம் துண்டிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தைக்கு இடமில்லை
தாம் போரில் ஈடுபட்டுள்ளதாகவும். அதனால், பேச்சுவார்த்தைக்கோ அல்லது மத்தியஸ்தம் செய்வதற்கோ உரிய தருணம் இது அல்லவெனவும் தம்முடைய எல்லை பகுதியை பாதுகாக்க முயற்சித்து வருவதாகவும் இஸ்ரேல் அறிவித்துள்ளது.

மரண அறிவித்தல்