தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட 5000 கொடுப்பனவு இன்றும் வழங்கப்படவுள்ளது!
People
Money
SriLanka
Samurdhi
By Chanakyan
புத்தாண்டை முன்னிட்டு கொரோனா தொற்றால் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள சமுர்த்தி பயனாளர்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறு வோறுக்கான 5000 ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
நேற்றைய முன்தினம் புத்தாண்டை முன்னிட்டு இந்த நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்து. எவ்வாறாயினும் குறித்த நிவாரணத்தை பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு இன்று முதல் மீண்டும் வழங்கப்படவுள்ளது.
இதுவரையில் 18 லட்சம் குடும்பங்களுக்கு இந்த நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பங்களின் சுமார் 75 சதவீதமானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஏனையவர்களுக்கு அடுத்த சில நாட்களில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்