ஜன்னல் வழியாக வீட்டிற்குள் நுழைந்து கொள்ளை - அதிரடி விசாரணையில் சிக்கிய கொள்ளையர்கள்
பம்பலப்பிட்டி ஸ்கெல்டன் வீதியிலுள்ள கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் வீட்டில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கொள்ளைச்சம்பவத்துடன் தொடர்படைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொம்பனி தெரு தனுஷ்க என்ற கொண்டையா மற்றும் ஹோகந்தரவைச் சேர்ந்த கோமணபெல்லா விரிது ருவன் மற்றும் களு மல்லி ஆகிய பெயர்களில் அழைக்கப்படும் பதிவுக் குற்றவாளியான ருவன் பிரேம குமார என்பவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் 25 கோடி ரூபா பணம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நாணயங்கள், தங்கம் மற்றும் வெள்ளி முத்துக்கள் மற்றும் கைத்துப்பாக்கி என்பவற்றை திருடியதன் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பம்பலபிடிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் கைது

பொரளை மற்றும் பம்பலப்பிட்டி காவல்துறையினரின் கூட்டு நடவடிக்கையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இருவரினால் வீட்டில் திருடப்பட்ட சொத்துக்களில் 380 கிராம் தங்க நகைகள், 10,000 அமெரிக்க டொலர்கள், 100,950 ஜப்பானிய யென், ரொலக்ஸ் கைக்கடிகாரங்கள், விலைமதிப்பற்ற கற்கள், 174 இலட்சம் ரூபா பெறுமதியான பணம் மற்றும் கைத்துப்பாக்கி துப்பாக்கி என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேலும், சந்தேகநபர்கள் வசம் இருந்த பத்து கிராமுக்கு மேற்பட்ட ஹெரோயின் போதைப்பொருள் காவல்துறையினரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
விசாரணை

கடந்த 16 ஆம் திகதி தனுஷ்கவின் அறிவுறுத்தலின் பேரில் மற்றைய சந்தேக நபர் கோடீஸ்வர வர்த்தகரின் மூன்று மாடி வீட்டின் குளியலறையின் ஜன்னல் வழியாக வீட்டிற்குள் நுழைந்து அலுமாரியில் இருந்த சொத்துக்களை திருடியுள்ளார்.
கோடீஸ்வர தொழிலதிபர் ஒருவர், அவரது மனைவி மற்றும் இரண்டு பணிப்பெண்கள், திருடிய போது வீட்டின் கீழ்ப்புறத்தில் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
திருடப்பட்ட சொத்துகள் தொழிலதிபர், அவரது மனைவி மற்றும் அவரது மகனின் மனைவிக்கு சொந்தமானது என்று விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கருவிகள் மூலமான காட்சிகளின் படி, விசாரணையின் போது மருதானை பிரதேசத்தில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.