கத்தோலிக்க திருச்சபையை கடுமையாக விமர்சித்த அமைச்சர் டிரான் அலஸ்
பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்தின் ஊடகப் பேச்சாளர் அருட் தந்தை சிறில் காமினி பயணித்த கார் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
காயமடைந்தவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் அருட் தந்தை சிறில் காமினி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேஷ்பந்து தென்னகோனை அழைத்து உதவி கேட்ட
அதன் போது பேராயர் மல்கம் ரஞ்சித் கர்தினால் அவர்களின் நெருங்கிய உறவினர் ஒருவர் அப்போதைய சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனை அழைத்து உதவி கேட்டதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
தேஷ்பந்து தென்னகோனுக்கு நன்றி தெரிவித்த சிறில் காமினி
காவல்துறை விசாரணையின் பின்னர் அருட் தந்தை சிறில் காமினிக்கு பிணை வழங்கப்பட்டதாகவும் மறுநாள் காலை அவர் தேசபந்து தென்னகோனை அழைத்து நன்றி தெரிவித்ததாகவும் அமைச்சர் கூறினார்.
பிரச்சினை ஏற்படும் போது இவ்வாறு நடந்துகொள்ளும் நபர்கள், பின்னர் காவல்துறையினரை அழைக்காதது போன்று நடந்து கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதிபர் செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |