வரலாற்றில் முதல் முறை: அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண்ணுக்கு கிடைத்த உயர் பதவி!
Government of Canada
Sri Lanka
Canada
By Kiruththikan
அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள அயர் மாவட்ட கோர்ட்டின் நீதிபதியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் தேஜல் மேத்தா (Tejal Mehta) நியமிக்கப்பட்டு உள்ளார்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் அயர் மாவட்ட நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இதற்கு முன்பு தேஜல் மேத்தா (Tejal Mehta) அயர் மாவட்ட கோர்ட்டின் இணை நீதிபதியாக பணியாற்றினார்.
மாவட்ட நீதிபதி
மாவட்ட தலைமை நீதிபதி ஸ்டேசி போர்டெஸ் தேஜல் மேத்தாவுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிலையில் பதவியேற்றபோது, `ஒரு வக்கீலாக இருந்தால் குறிப்பிட்ட கட்டத்தில் மட்டுமே பொதுமக்களுக்கு உதவ முடியும்.
அதுவே நீதிபதியாக இருக்கும்போது பல்வேறு உதவிகளை செய்யலாம்' என மேத்தா (Tejal Mehta) கூறினார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்