தமிழர் பகுதியில் 20 மாடுகளுடன் சிக்கிய மூவர்
வவுனியாவில் (Vavuniya) 20 மாடுகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் பூவரசன்குளம் பகுதியில் வைத்து இன்று (08.04.2025) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, வவுனியா, பூவரசன்குளம் சந்தியில் கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் , ஒரு லொறியை வழிமறித்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கைது நடவடிக்கை
அப்போது, குறித்த லொறியில் அனுமதிப்பத்திரம் இன்றி 20 மாடுகள் கொண்டு செல்லப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், லொறியில் இருந்த மூவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளதுடன் 20 மாடுகளையும் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட 20 மாடுகள் மல்லாவி பகுதியிலிருந்து குருநாகல் பகுதிக்கு கொண்டு செல்லப்படவிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் பூவரசன்குளம் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா 2025
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 1 நாள் முன்