மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து
By Harrish
காலி, இமதுவ, அங்குலுகஹா சந்தியில் மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் இன்று (26) காலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பில் தெரியவருகையில், இரண்டு தனியார் பயணிகள் பேருந்துகளும், அலுவலக ஊழியர்களை ஏற்றிச் செல்லும் பேருந்தும் ஒன்றுமே விபத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்து சம்பவம்
நிறுத்தப்பட்டிருந்த பேருந்தொன்றில் பயணித்துக்கொண்டிருந்த பேருந்து மோதியதுடன், அதன் பின்னால் வந்த மற்றொரு பேருந்து அதன் மீது மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது, விபத்தில் 29 பேர் காயமடைந்துள்ளதுடன், அவர்களில் 20 பேர் இமதுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 9 பேர் கராபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்