யாழில் கோர விபத்து! இளைஞர்கள் மூவர் கவலைக்கிடம்
Jaffna
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Theepan
யாழ்ப்பாணம் - புத்தூர் பகுதியில் இன்று இரவு இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
மட்டுவில் பகுதியிலிருந்து புத்தூர் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த டிப்பர் வாகனத்துடன் திடீரென குறுக்கே சென்ற முச்சக்கர வண்டி மோதியதில் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது டிப்பர் முச்சக்கர வண்டியின் மீது ஏறியதில் அதில் பயணம் செய்த மூன்று இளைஞர்களும் கால் நசுங்கி படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணை
படுகாயமடைந்த மூவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிலையில் மூவரின் நிலைமையும் கவலைக்கிடமாகவுள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், விபத்து தொடர்பான விசாரணைகளை அச்சுவேலி காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்