வியாழேந்திரனின் மெய்ப்பாதுகாவலர் நடத்திய துப்பாக்கிசூடு -எடுக்கப்பட்ட நடவடிக்கை
ராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் மட்டக்களப்பில் அமைந்துள்ள வீட்டின் முன் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சம்பந்தப்பட்டவராக தெரிவிக்கப்படும் மெய்ப்பாதுகாவலரான சந்தேகநபர் இன்று (ஜூன் 22) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
துப்பாக்கிச் சூடு தனிப்பட்ட பகை காரணமாக நடந்ததாக அவர் தெரிவித்தார். மரணம் மற்றும் பிரேத பரிசோதனை தொடர்பான மஜிஸ்திரேட் விசாரணை இன்று நடைபெறும்.
பொலிஸ் உத்தியோகத்தர் என்ற சந்தேக நபரின் நடவடிக்கைகளுக்கு இலங்கை பொலிஸ் அனுமதி அளிக்கவில்லை என்று பொலிஸ் ஊடக செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து முழு விசாரணை நடத்த சிறப்பு பொலிஸ் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.