வடக்கில் தொடரும் ஆசிரிய இடமாற்ற சர்ச்சை : வெளிநாடு சென்ற ஆசிரியருக்கும் இடமாற்றம்
வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள சேவையின் தேவை கருதிய ஆசிரிய இடமாற்றப்பட்டியலில் வெளிநாடு சென்ற ஆசிரியர் ஒருவரின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆசிரியர் கல்வி திணைக்களத்தின் அனுமதியின்றி வெளிநாடு சென்றமையினால் 2024.09.12 திகதி NP/41/20/01/01/06/1-123 இலக்கமும் கொண்ட கடிதத்திற்கு அமைவாக 2024.03.01 முதல் அவரது பதவி வறிதாக்கப்பட்டது.
வடமாகாண ஆசிரிய இடமாற்றப்பட்டியல்
இவ்வாறான நிலையில் அண்மையில் வெளியாகிய வடமாகாண ஆசிரிய இடமாற்றப்பட்டியலில் குறித்த ஆசிரியர் மடு வலயத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில், கிளிநொச்சி வலயத்தில் அதிபர் சேவையில் உள்ள ஒருவருக்கு 2026 ஆம் ஆண்டு ஆசிரியர் இடமாற்ற பட்டியலில் பெயர் உள்வாங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வடமாகாண கல்வி திணைக்களத்தில் முறைகேடான இடமாற்றங்கள் இடம்பெறுவதாக தெரிவித்து யாழ்ப்பாண நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவது கல்வித் திணைக்களம் மீது ஏற்பட்டுள்ள சந்தேகத்தை உறுதிப்படுத்துவதாக அமைகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |