பாறைகளுக்கிடையில் சிக்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம்!
Death
Investigation
Police
Matara
By Vasanth
மாத்தறை பரை தீவிற்கு அருகில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடலோர அரிப்பைத் தடுப்பதற்குப் பயன்படுத்தப்படும் பாறைகளுக்கு இடையிலேயே சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மாத்தறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அதேவேளை சடலத்திற்கு அருகில் இருந்து வங்கியொன்றின் இலட்சினை பதிக்கப்பட்ட குடை, பயன்படுத்தப்பட்ட பால் பக்கெட்டுக்கள் நான்கு மற்றும் பற்றுச்சீட்டு ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் இது வரை அடையாளம் காணப்படவில்லை எனவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி