உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை! கோட்டாபய உள்ளிட்ட மூவருக்கு வெளிநாடு செல்ல தடை
Easter
Gotabaya Rajapaksa
Easter Attack Sri Lanka
Court of Appeal of Sri Lanka
By Thulsi
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் இராணுவ அதிகாரிகள் இருவருக்கு வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவானது கோட்டை நீதவான் பசன் அமரசேனவினால் இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உத்தரவு
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர் தொடர்பாக, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள வழக்கு இன்று (03) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி