இலங்கைக்கு பயணம் பிரித்தானியா விடுத்துள்ள எச்சரிக்கை
இலங்கைக்கு பயணத்தை மேற்கொள்ளும் போது மிகவும் அவதானமாக இருக்குமாறு பிரித்தானிய அரசாங்கம் தமது பிரஜைகளுக்கு அறிவித்துள்ளது.
இலங்கைக்கு விஜயம் செய்யும் பிரித்தானிய பிரஜைகளுக்கு தொடர் அறிவுறுத்தல்களை விடுத்து, இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக சுற்றுலா பயணிகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்க நேரிடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மருந்து, உணவு, எரிபொருள் உள்ளிட்ட அடிப்படைத் தேவை

இலங்கையில் மருந்து, உணவு, எரிபொருள் உள்ளிட்ட அடிப்படைத் தேவை இல்லையெனவும், தினசரி மின்வெட்டு மேற்கொள்ளப்படும் என்றும் அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினர் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம்

மேலும், போராட்டத்தை கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொள்வதால், அவ்வாறான இடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறும் பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
தகுந்த காப்புறுதியைப் பெற்றுக்கொள்வது மிகவும் அவசியமானால் மட்டுமே இலங்கைக்கான பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.