ஹவுதியால் மீண்டும் பற்றி எரியும் சவூதி அரேபியா: மிகக் கடுமையான பதிலடி: கதறும் ட்ரம்ப்
சவூதி அரேபியாவின் சர்வதேச விமான நிலையங்கள் மற்றும் எண்ணெய் மற்றும் எரிவாயு மையங்களை இலக்கு வைத்து யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களுக்கு "மிகக் கடுமையான பதில் நடவடிக்கை" எடுக்கப்படும் என சவூதி அரேபியாவின் மின்சக்தி வலுசக்தி அமைச்சர் இளவரசர் அப்துல் அஸீஸ் பின் சல்மான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரியாத்தில் நடைபெற்ற WPC சர்வதேச எரிசக்தி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களினால் ரியாத்தின் மன்னர் காலித் சர்வதேச விமான நிலையம் எதிர் வரும் சனிக்கிழமை (17) வரை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆபத்தான சூழல்
ரியாத்தில் உள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையம் மற்றும் தம்மாமில் உள்ள மன்னர் ஃபஹத் சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட பல இலக்குகள் மீது ஹவுதி அமைப்பினர் தொடர்ச்சியாக ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரான் ஆதரவு ஹவுதிகள் அடுத்தடுத்து நடக்கும் இந்த தொடர் தாக்குதல்களில் இதுவரை அமெரிக்கர் ஒருவர் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், ஏற்கெனவே பதற்றமும் மோதல்களும் நிலவும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் ஓர் ஆபத்தான சூழலை உருவாக்கியுள்ளன.
கடுமையாக பதிலடி
இந்நிலையில்சவூதி அரேபியாவின் முக்கிய சர்வதேச விமான நிலையங்களைக் இலக்கு வைத்து யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், அவர்களின் இந்த நடவடிக்கைகள் "மிகவும் மோசமானவை" என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையாகக் விமர்சித்துள்ளார்.

அத்துடன் ஏமனைத் தளமாகக் கொண்ட ஹவுதிகள் குழுவை ஒழிக்கும் முயற்சிகளில் சவூதி அரேபியாவுடன் அமெரிக்காவும் இணையக்கூடும் என ஜனாதிபதி டொனால்ட் டரம்ப் தெரிவித்துள்ளார்.
இதேவேளை யேமனுக்கு எதிரான ஆக்கிரமிப்பில் அமெரிக்கா ஈடுபட்டால் பதிலடி கொடுப்பது குறித்து நாங்கள் ஆலோசிக்க மாட்டோம், மாறாக அமெரிக்காவையும் பிராந்தியத்தில் உள்ள அதன் அனைத்து நலன்களையும் குறிவைத்து விரைவான மற்றும் கடுமையான பதிலடி கொடுக்கப்படும்இ என்று ஹவுதி அரசியல் குழு உறுப்பினர் முகமது அல் புகாரி ஐரோப்பிய செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |