மனம் மாறிய ட்ரம்ப்: அறிவித்த சில நாளிலேயே மாற்றம் பெறப்போகும் தீர்மானம்
உலக சுகாதார அமைப்பிலிருந்து (WHO)அமெரிக்கா (US) வெளியேறுவதாக அறிவித்த சில நாட்களுக்குப் பிறகு, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப (Donald Trump) மீண்டும் அந்த அமைப்பில் இணைவது குறித்து பரிசீலிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
அண்மையில் கொரோனா தொற்றுநோய் மற்றும் பிற சர்வதேச சுகாதார நெருக்கடிகளை தவறாகக் கையாண்டதற்காக, உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்க விலகுவதாக ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்திருந்தார்.
ட்ரம்பின் அறிவிப்பு
இந்த நிலையில், மீண்டும் இணைவது தொடர்பில் பரிசீலிக்க உள்ளதாகவும், தாம் அமைப்பில் இணைந்தால் அதனை சுத்தம் செய்ய வேண்டியிருக்கும் என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
ஜனவரி 22, 2026 அன்று அமெரிக்கா WHO-வை விட்டு வெளியேறுவதாக அறிவித்திருந்தது, வெள்ளை மாளிகையில் இரண்டாவது முறையாக பதவியேற்ற பிறகு திங்களன்று ட்ரம்ப் இந்த அறிவிப்பை விடுத்திருந்தார்.
WHO-வின் மிகப்பெரிய நிதி ஆதரவாளராக அமெரிக்கா உள்ளது, அதன் ஒட்டுமொத்த நிதியில் சுமார் 18% அமெரிக்க பங்களித்து வருகிறது, கடந்த இரண்டு ஆண்டுகளில் அமெரிக்காவின் WHOஇற்கான பங்களிப்பு $6.8 பில்லியன் என தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்கா அதிருப்தி
இந்த நிலையில், அதிக மக்கள்தொகை கொண்ட சீனாவை விட WHO இற்கு அமெரிக்கா அதிக பணம் செலுத்தியதில் தான் அதிருப்தி அடைந்துள்ளதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், தற்போது, மீண்டும் உலக சுகாதார அமைப்பில் அமெரிக்கா இணைவது குறித்து பரிசீலிக்கலாம் என ட்ரம்ப் தெரிவித்துள்ளமை சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |