இரத்த வெறியோடு திரியும் இஸ்ரேல் - காசா போர் நிறுத்தம்! ட்ரம்பிற்கு கிடைத்த வெற்றி
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இரு தரப்பும் அமைதி திட்டத்தின் முதல் கட்டத்துக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விடயத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
பணயக்கைதிகள் அனைவரும் மிக விரைவில் விடுவிக்கப்படுவார்கள், மேலும் இஸ்ரேல் தங்கள் துருப்புக்களை ஒப்புக்கொண்ட எல்லை வரை திரும்பப் பெறும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலுக்கு ஒரு சிறந்த நாள்
இந்த ஒப்பந்தத்தை "இஸ்ரேலுக்கு ஒரு சிறந்த நாள்", இஸ்ரேலிய துருப்புக்கள், அமெரிக்க ஜனாதிபதி மற்றும் அவரது குழுவினருக்கு நன்றி என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
ஒப்பந்தத்தை அங்கீகரிக்கவும் பணயக்கைதிகள் அனைவரையும் வீட்டிற்கு அழைத்து வரவும் நாளை இஸ்ரேல் அரசாங்கத்தை கூட்டுவேன் என்று நெதயன்யாகு தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் இந்த ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தியுள்ளது மற்றும் இந்த ஒப்பந்தத்தை முழுமையாக பின்பற்ற இஸ்ரேலை கட்டாயப்படுத்துமாறு ட்ரம்ப் மற்றும் சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
காசா மீதான தாக்குதல்
போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டதாக செய்திகள் வெளியான போதிலும், இஸ்ரேலிய இராணுவம் காசா மீதான தாக்குதல்களைத் தொடர்வதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
காசா நகரின் மேற்குப் பகுதிகள் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் குண்டுவீசித் தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை வரவிருக்கும் நாட்களில் மத்திய கிழக்கிற்கு பயணம் செய்வது குறித்து டிரம்ப் பரிசீலித்து வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
