உருக்கு கவச பதுங்கு குழி வாசலில் சிக்கிய மதுரோ! நேரலையில் பார்த்த ட்ரம்ப்
வெனிசூலாவில் அதன் ஜனாதிபதி அமெரிக்க கொமாண்டோக்களால் கைது செய்யப்பட்ட நடவடிக்கையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது மார்-எ-லாகோவில் உள்ள வதிவிடத்தில் வைத்து நேரடியாக பார்வையிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த காட்சிகளை சிறப்பாக அமைக்கப்பட்ட திரைகளில் அவருக்கு காணொளியாக ஒளிபரப்பட்டதாக தெரிகிறது.
150க்கும் மேற்பட்ட விமானங்களுடன் நடத்தப்பட் இந்த அப்சலூற் றிசோல்வ் (Operation Absolute Resolve ) என்ற குறியீட்டு நடவடிக்கையில் பிடிக்கபட்ட வெனிசூலா ஜனாதிபதியும் அவரது துணைவியும் தற்போது நியூயோர்க் புரூக்ளினில் உள்ள பெருநகர தடுப்பு மையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்கப்படையினரின் சுற்றிவளைப்பு
வெனிசுலாவின் உள்ளூர் நேரப்படி நேற்று அதிகாலை 2:01 க்கு டெல்டா படை கொமாண்டோக்கள் நைட் ஸ்டாக்கர்ஸ் எனபடும் சிறப்பு நடவடிக்கை விமானப் படைப்பிரிவு உலங்குவானுர்திகள் மூலம் தலைநகரில் கராகஸில் உள்ள மதுரோவின் வதிவிட வளாகத்தில் தரையிறங்கி இந்த நடவடிக்கையை மேற்கொண்டபோது அதனை ட்ரம்ப் பார்வையிட்டுள்ளார்.

Image Credit: CNN
அமெரிக்கப்படையினரின் தனது வளாகத்தை சுற்றிவளைத்ததை அறிந்த மதுரோ தனது வதிவிடத்தில் இருந்த உருக்கு கவசங்களை கொண்ட பதுங்குக் குழிக்கு தப்பிச் செல்ல முயன்றபோதும் அந்த முயற்சி அமெரிக்க கொமாண்டோக்களால் முறியடிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.
ட்ரம்பின் அனுமதி
ட்ரம்ப், இந்த நடவடிக்கைக்கு கிறிஸ்துமஸுக்கு முந்தைய நாட்களில் பச்சைக்கொடி காட்டிய போதிலும் வானிலை சீராகியதும் இந்த நடவடிக்கை எடுக்கபட்பட்டுள்ளது. நேற்று தனது இரவு உணவை முடித்தபின்னர் இந்த நடவடிக்கைக்கு இறுதி அனுமதி வழங்கிய ட்ரம்ப அதன் பின்னர் இந்த நடவடிக்கையை நேரடியாக பார்த்துள்ளார்.

Image Credit: The City Paper Bogotá
முதலில் அமெரிக்க உலங்குவானுர்திகள் கடல் மட்டத்தில் இருந்து 100 அடி உயரத்தில், தாழ்வாக பறந்து கராகசுக்கு சென்ற பின்னர் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கபட்டது.
சொற்பநேரத்தில் வெனிசுலா ஜனாதிபதி அமெரிக்கபடையினரால் பிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |