ட்ரம்பினால் ஆரம்பமாகியுள்ள புதிய சகாப்தம்: பிரித்தானிய அரசு எடுத்துள்ள தீர்மானம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் (Donald Trump) வழிமுறைகளுக்கு ஆரம்பமாகியுள்ள புதிய சகாப்தத்திற்கு பிரித்தானியாவின் கெய்ர் ஸ்டார்மரின் (Keir Starmer) அரசாங்கம் ஆதரவளிப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விடயத்தை பிரித்தானியாவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கடுமையான வரிவிதிப்பு மற்றும் 'அமெரிக்கா முதலில்' என்ற கொள்கையைத் தொடர்ந்து சர்வதேச வர்த்தக சந்தை நிச்சயமற்ற நிலையை எட்டியுள்ளது.
உலகமயமாக்கல்
இந்த நிலையில், பிரித்தானியாவின் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் , உலகமயமாக்கல் சகாப்தத்தின் முடிவை அறிவிக்கத் திட்டமிட்டுள்ளதாக அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.
இது தொடர்பில் இன்று உரையாற்றிய பிரித்தானியப் பிரதமர், கடந்த 1991ஆம் ஆண்டு, சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட உலகமயமாக்கல் திட்டம் தோல்வியை எதிர்நோக்கியுள்ளதனை ஏற்றுக் கொள்கிறோம்.
இது தவிர, சுதந்திர வர்த்தகம் மற்றும் வெகுசன குடியேற்றத்தால் எந்த நன்மையும் ஏற்படவில்லை என நம்பும் அமெரிக்க ஜனாதிபதியின் ஆதரவாளர்கள், அவரது பொருளாதார தேசியவாதம் ஏன் பிரபலமாக உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது.” என அவர் தெரிவித்துள்ளார்.
ட்ரம்பின் வரி விதிப்பு
அத்துடன், பிரித்தானியாவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர், “டொனால்ட் ட்ரம்பின் 10 சதவீத அடிப்படை வரி மற்றும் பிற சமீபத்திய பாதுகாப்புவாத நடவடிக்கைகளுடன் பிரித்தானியா இணங்கவில்லை.
இருப்பினும், டொனால்ட் ட்ரம்பின் வழிமுறைகளுக்கு பாரிய ஆதரவான ஒரு புதிய சகாப்தம் ஆரம்பமாகியுள்ளதாகவும், கெய்ர் ஸ்டார்மரின் அரசாங்கம் அதனை ஏற்றுக்கொள்கிறது” என அவர் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
