ஆழிப்பேரலையில் உயிரிழந்தவர்களை நினைவுகூற தயாராகும் முல்லைத்தீவு(படங்கள்)
இலங்கையில் ஆழிப்பேரலை ஏற்பட்டு நாளையுடன் 18 வருடங்கள் பூர்த்தியடையும் நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆழிப்பேரலை நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற ஏற்ப்பாடாகி வருகின்றது.
கடந்த 2004 ம் ஆண்டு டிசம்பர் 26 ம் திகதி இடம்பெற்ற ஆழிப்பேரலை அனர்த்தம் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் சுமார் 3500 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததோடு பல்லாயிரக்கணக்கானவர்கள் காயமடைந்த நிலையில் பலகோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் அழிக்கப்பட்டது.
இந்நிலையில் மக்களின் மனங்களில் ஆறாத ரணமாய் படிந்த ஆழிப்பேரலையின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நாளை (26) முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெறவுள்ளன.
நினைவேந்தல் நிகழ்வு
முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு நகரில் அமைந்துள்ள சுனாமி நினைவாலயத்தில் நாளை காலை 8 மணி முதல் சர்வமத வழிபாடுகள் நடைபெற்று அஞ்சலி நிகழ்வு இடம்பெறும் எனவும் அனைவரையும் பங்குபற்றுமாறு ஏற்பாட்டு குழுவினர் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆழிப்பேரலையால் உயிரிழந்த ஒரு தொகுதி உறவுகளின் உடலங்கள் புதைக்கப்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள சுனாமி நினைவாலய வளாகத்தில் காலை 7.55 மணிக்கும், முள்ளியவளை கயட்டை பகுதியில் உள்ள நினைவு தூபியில் நாளை (26) மாலை 5.05 மணிக்கும், அனர்த்தம் காரணமாக அதிகளவானவர்கள் காவு கொள்ளப்பட்ட கள்ளப்பாடு கிராமத்தில் நாளை காலை 8.00 மணிக்கு நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேசிய பாதுகாப்பு தின நிகழ்வுகள் நாளை காலை 9 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றவுள்ளது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் பெரிய சப்பரம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 நாள் முன்
