யாழ் பல்கலைக்கழகத்தில் அனுஷ்டிக்கப்பட்ட நினைவேந்தல் நிகழ்வு!
2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி உலகையே உலுக்கிய ஆழிப்பேரலையின் தாக்கம் ஏற்பட்டு இன்றுடன் 18 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
குறித்த அழிப்பேரலையால் உயிரிழந்த உறவுகளை நினைவுகூரும் நிகழ்வு இலங்கையின் பல இடங்களில் அனுஷ்டிக்கப்படுகிறது.
இந்தநிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் ஆழிப் பேரலை நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ் பல்கலைக்கழக நினைவேந்தல்
ஆழிப்பேரலையில் உயிர்நீத்தவர்களுக்கான 18ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கு முன்றலில் இன்றைய தினம் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.
ஆழிப்பேரலையில் உயிர்நீத்த உறவுகளின் நினைவுருவ படத்திற்கு அகவணக்கம் செலுத்தி ஈகைச்சுடரேற்றப்ட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இதன் பொழுது யாழ் பல்கலைக்கழக மாணவர்கள், ஊழியர்கள், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.





நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் பெரிய சப்பரம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 நாள் முன்
