கொழும்பில் கொடூர சம்பவம் - சகோதரர்கள் இருவர் வெட்டிப் படுகொலை
கொழும்பில் (Colombo) சகோதரர்கள் இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த கொலை சம்பவம் இன்று (15) காலை கொழும்பு, கிராண்ட்பாஸ் - களனிதிஸ்ஸகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
23 மற்றும் 24 வயதுடைய சகோதரர்கள் இருவரே இவ்வாறு வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, மட்டக்களப்பில் (Batticaloa) நண்பர்களுக்கு இடையேயான மோதலில் ஒருவர் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (14) மட்டக்களப்பு வெல்லாவெளி காவல்துறை பிரிவிலுள்ள சின்னவத்தை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
வெல்லாவெளி சின்னவத்தை பக்கியெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய புவனேந்திரராசா என்பவரே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 6 நாட்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்