இரண்டு எம்.பிக்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டனர்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக கொவிட் தொற்றால் பாதிக்கப்படுவதை அடுத்து அவர்களுடன் தொடர்பை பேணிய ஏனைய எம்.பிக்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள். இந்தநிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சமிந்த விஜேசிறி மற்றும் ஹேஷா விதானகே ஆகியோர் தங்களை சுயதனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்றுறுதியான நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாபா பண்டாரவுடன் தொடர்பை பேணியதை அடுத்தே அவர்கள் தம்மை சுய தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் அமைச்சர்களான பவித்ரா வன்னியாராச்சி, வாசுதேவ நாணயக்கார, இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, பியல் நிஷாந்த டி சில்வா, நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கு இதுவரையில் கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் தொடர்ச்சியாக பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.