தென்னிலங்கையில் கோர விபத்து! வவுனியாவை சேர்ந்த இளைஞர்கள் இருவர் பலி
Colombo
Vavuniya
Sri Lankan Peoples
By Dilakshan
நாரம்மல, அலஹிடியாவ பகுதியில் இன்று (12) இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
லொறி கட்டுப்பாட்டை இழந்து தொலைபேசி கம்பத்தில் மோதி கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதன்போது, லொறியின் பின்புறத்தில் பயணித்த இருவரும் லொறிக்கு அடியில் நசுங்கி காயமைடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.
சாரதி கைது
சம்பவத்தில் வவுனியா மற்றும் நெடுங்கேணி பிரதேசங்களைச் சேர்ந்த 26 மற்றும் 29 வயதுடைய இரண்டு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.
விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பில் நாரம்மல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

5ம் ஆண்டு நினைவஞ்சலி