புலம்பெயர்ந்தவர்களுக்கு பிரித்தானிய அரசு வெளியிட்டுள்ள மகிழ்ச்சி தகவல்
பிரித்தானியாவில் (United Kingdom) நிரந்தரமாக வசிக்கும் உரிமை பெறுவதற்கு புலம்பெயர்ந்தவர்களுக்கான தகுதி காலத்தை பத்து ஆண்டுகளாக உயர்த்தி பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது.
தற்போது இருக்கும் நடைமுறைகளின்படி அகதிகளாக வந்து தஞ்சம் அடைந்தவர்கள், ஐந்து ஆண்டுகள் பிரித்தானிய வாழ்ந்தால் நிரந்தரமாக வசிக்கும் தகுதி பெறுகின்றனர்.
அத்தோடு, தங்களின் குடும்பத்தினரையும் பிரித்தானியாவிற்கு அழைத்து வரும் உரிமையும் வழங்கப்பட்டது.
புலம்பெயர்ந்தோர்
இந்த நடைமுறை இனி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரித்தானிய உள்துறை அமைச்சர் புலம்பெயர்ந்தோருக்கான விதிகளை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நிரந்தரமாக வசிப்பதற்கு அனுமதி பெறுவதற்கான தகுதிக்காலம் பத்து ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
குடும்பத்தினரை பிரித்தானியா அழைத்து வரும் நடைமுறையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பம்
இதற்கான விண்ணப்பம் செப்டம்பர் மாதத்தில் இருந்தே நிறுத்தப்பட்டு விட்டது. குற்றங்களில் ஈடுபடாமல் இருத்தல் மற்றும் ஆங்கிலம் பேசுதல் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
அதேவேளையில் அகதிகளாக வருபவர்கள் திருப்பி அனுப்பப்பட மாட்டார்கள் என்றும் மற்றும் அவர்களுக்கு அடிப்படை பாதுகாப்பு உரிமைகள் வழங்கப்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்காவில் பிற நாட்டவர்களுக்கான கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்ட நிலையில் தற்போது பிரித்தானியாவிலும் இது கடுமையாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
