உக்ரைன் போரில் இதுவரை கொல்லப்பட்ட பொதுமக்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்
ஐ.நா மனித உரிமைகள் அமைப்பின்படி, உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போரில் சுமார் 7000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கீவ் இண்டிபென்டென்ட் தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் முதல் உக்ரைன் மீது ரஷ்யா போர் புரிந்து வருகிறது. கனரக பீரங்கிகள், பல ஏவுகணை ராக்கெட் அமைப்புகள், ஏவுகணைகள் மற்றும் வான்வழித் தாக்குதல்கள் மூலம் உக்ரனைத் தொடர்ந்து தாக்கி வருகிறது.
இந்த நிலையில் உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல்களுக்கு ஐ.நா கண்டனம் தெரிவித்துள்ளது.
6,884 பொதுமக்கள்
மேலும், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமைப்பின்படி, பிப்ரவரி 24ஆம் திகதி முதல் டிசம்பர் 26ஆம் திகதி வரை உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரில் குறைந்தது 6,884 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என கீவ் இண்டிபென்டென்ட் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் கடந்த 27ஆம் திகதி Seredino-Budsk community, The Shalyginsk community மற்றும் The Esmansk community ஆகிய மூன்று முன்னணிப் பகுதிகள் மீது ரஷ்ய துருப்புகள் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அரசியல் பிரமுகர் Dmytro Zhyvytskyi சுட்டிக்காட்டியுள்ளார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
