நூலிழையில் உயிர் தப்பிய புடின்: வெளியான அதிர்ச்சி தகவல்
உக்ரைனின் (Ukraine) ட்ரோன் தாக்குதலில் இருந்து ரஷ்ய (Russia) ஜனாதிபதி புடின் (Vladimir Putin) நூலிழையில் உயிர் தப்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் தொடர்ந்து வருகின்ற நிலையில் அண்மையிலும் தொடர் தாக்குல் நடத்தப்பட்டது.
கிட்டத்தட்ட 266 ட்ரோன்கள் மற்றும் 45 ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி உக்ரைன், ரஷ்யாவை நிலைகுலைய வைத்தது.
ட்ரோன் தாக்குதல்
இந்நிலையில், உக்ரைனின் ட்ரோன் தாக்குதலில் இருந்து ரஷ்ய புடின் உயிர் தப்பிய விவரம் தற்போது வெளியாகி உள்ளது.
இந்த சம்பவம் மே 20 ஆம் திகதி நடந்ததாக சர்வதேச ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குர்ஸ்க் பகுதிக்கு புடின் ஹெலிகாப்டரில் சென்று கொண்டு இருந்த போது, அதன் பாதையை நோக்கி ட்ரோன் ஒன்று வருவது கண்டறியப்பட்டுள்ளது.
ட்ரோன் தாக்குதல்
அதனை இடைமறித்து ரஷ்ய வான் பாதுகாப்புப் படை அழித்த நிலையில், இதன் மூலம் ஹெலிகாப்டரில் இருந்த புடின் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குர்ஸ்க் வான்வெளியில் உக்ரைன் ட்ரோன்கள் எவ்வாறு அத்துமீறி நுழைந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரோன் தாக்குதலின் போது ஹெலிகாப்டரில் புடின் இருந்த நிலையில், இது குறித்து உக்ரைன் அரச அந்நாட்டு இராணுவமோ எவ்வித விளக்கமும் வெளியிடவில்லை என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

