நாடாளுமன்றத்தின் நடுவே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சி!
Parliament
Sajith Premadasa
SJB
SriLanka
By Chanakyan
எரிபொருள் விலையேற்றை கண்டித்தும், அதிகரிக்கப்பட்ட விலையை குறைக்குமாறு வலியுறுத்தியும் ஐக்கிய மக்கள் சக்தியினர் குறித்த எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இன்றைய தினத்திற்கான நாடாளுமன்ற அமர்வு காலை பத்து மணிக்கு ஆரம்பமாகியுள்ள நிலையில் சபையில் எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
சபைக்குள் எழுந்து நின்றும், சிலர் சபைக்கு நடுவே அமர்ந்திருந்தவாறும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலான கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.
அத்துடன் எரிபொருள்களின் விலைகளை குறைக்குமாறு கோரி அரசாங்கத்துக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி