ரஸ்ய தனியார் கூலிப்படைக்கு வடகொரியா ஆயுத உதவி - பதிலடி கொடுத்த அமெரிக்கா
வாக்னர்
உக்ரைன் போரில் பயன்படுத்துவதற்காக ரஸ்யாவின் தனியார் கூலிப்படையான வாக்னர் குழுவுக்கு ஏவுகணைகள் முதலான ஆயுதங்களை வட கொரியா விநியோகித்தது என அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.
இந்த ஆயுத விநியோகம் ஐநா பாதுகாப்புச் சபை தீர்மானங்களை மீறுவதாகும் என வெள்ளை மாளிகை கூறியுள்ளது.
அத்துடன் வாக்னர் (wagner) குழுவுக்கு எதிராக மேலதிக தடைகளை விதிக்கவுள்ளதாகவும் வெள்ளை மாளிகை பதிலடி கொடுத்துள்ளது.
உக்ரைனில் இராணுவ நடவடிக்கை

எனினும் வாக்னர் குழுவுக்கு தான் ஆயுதம் விநியோகித்ததாக கூறப்படுவதை வட கொரியா நிராகரித்துள்ளது, வாக்னர் குழுவும் இதை நிராகரித்துள்ளது.
இதேவேளை, உக்ரைனில் வாக்னர் கூலிப்படையினரின் எண்ணிக்கை சுமார் 1,000 இலிருந்து 20,000 ஆக அதிகரித்துள்ளது என பிரித்தானிய அரசு கூறியுள்ளது.
உக்ரைனில் இராணுவ நடவடிக்கையில் பயன்படுத்துவதற்காக உலகம் முழுவதும் ஆயுத விநியோகத்தர்களை வாக்னர் தேடுகிறது என வெள்ளை மாளிகையின் பேச்சாளர் ஜோன் கேர்பி, செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.