ஈரானுக்குள் நுழைந்த அமெரிக்க - இஸ்ரேல் தொடர்பு ஆயுத குழு!

Donald Trump Dollars Iran-Israel War Iran-US Conflict
By Dharu Aug 29, 2026 05:38 PM GMT
Report

ஈரானுக்கு எதிரான போரைத் தொடருமாறு அமெரிக்காவை, இஸ்ரேலுடன் இணைந்த சக்திகள் ஊக்குவிப்பதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்க அரசாங்கத்திற்குள் இருக்கும் சில சக்திகள், உலகளாவிய எரிசக்தி சந்தைகளைக் கையாளவும், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை தோல்வியடையும் ஒரு போரில் சிக்க வைக்கவும்  முயற்சிப்பதாக அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் தென்கிழக்கு ஈரானில், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஒரு ஆயுதக் குழுவை பாதுகாப்புப் படைகள் கலைத்துவிட்டதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) தனியாக அறிவித்த நிலையில், இந்தக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

சர்வதேசத்துக்கு சவாலாகும் மத்திய கிழக்கு ஒப்பந்தங்கள்! ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை

சர்வதேசத்துக்கு சவாலாகும் மத்திய கிழக்கு ஒப்பந்தங்கள்! ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை

அமெரிக்கக் கடற்படை முற்றுகை

அமெரிக்கக் கடற்படை முற்றுகையையும் மீறி, 7.5 பில்லியன் டொலர் எண்ணெய் வருவாயைத் தனது மத்திய வங்கிக்கு மாற்றியதாக ஈரான் அறிவித்ததுடன், பொருளாதார ரீதியாகத் தனிமைப்படுத்துவதற்கான அமெரிக்காவின் முயற்சிகள் எதிர்பார்த்த பலன்களை அளிக்கவில்லை என்பதற்கு இந்தப் புள்ளிவிவரங்களை ஆதாரமாக முன்வைக்கப்பட்டுள்ளது.

ஈரானுக்குள் நுழைந்த அமெரிக்க - இஸ்ரேல் தொடர்பு ஆயுத குழு! | Us Israeli Liaison Weapons Group Enters Iran

இஸ்ரேல் சார்பு சகாக்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் அமெரிக்க - இஸ்ரேல் போருக்கு மத்தியில், உலகளாவிய எரிசக்தி சந்தைகளைக் கையாளுவதற்கான குறிப்பிடத்தக்க முயற்சிகளை ஈரான் உளவுத்துறை அடையாளம் கண்டுள்ளதாக அராக்சி சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.

அராக்சி இன்று வெளியிட்ட எக்ஸ் பதிவில், ஈரானிய உளவுத்துறை தகவல்களின்படி உலகளாவிய எரிசக்தி சந்தைகளை கையாளுவதற்கான குறிப்பிடத்தக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாகக் கூறியுள்ளார்.

இஸ்ரேலுக்கு பிரித்தானியா விடுத்துள்ள எச்சரிக்கை! 20 அம்ச அமைதித் திட்டத்தில் உறுதி

இஸ்ரேலுக்கு பிரித்தானியா விடுத்துள்ள எச்சரிக்கை! 20 அம்ச அமைதித் திட்டத்தில் உறுதி

ட்ரம்ப் தோல்வியடையும் போர்

அமெரிக்க அரசாங்கத்துக்குள் உள்ள சிலர், நம்பிக்கைக்குரியதாக எளிதில் நம்பும் ஊடகங்களை பயன்படுத்தி எரிசக்தி விலைகளை தங்களது தனிப்பட்ட நிதி ஆதாயத்திற்காக பாதிக்க முயற்சிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

ஈரானுக்குள் நுழைந்த அமெரிக்க - இஸ்ரேல் தொடர்பு ஆயுத குழு! | Us Israeli Liaison Weapons Group Enters Iran

மேலும், இதுபோன்ற முயற்சிகள் ட்ரம்பை தோல்வியடையும் போரில் சிக்கவைத்திருக்க நோக்கமாகக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலுடன் தொடர்புடைய தரப்புகளும் போரை ஆதரிக்கும் வகையில் நம்பிக்கையூட்டும் மதிப்பீடுகளை முன்வைக்கின்றன, என்றும் அராக்சி கூறியுள்ளார்.

இதன் பொருளாதாரச் சுமையை அமெரிக்க நுகர்வோர் ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவில் நடக்கும் சந்திப்புகளை துல்லியமாக பகிரும் அமெரிக்கா! ஜெலென்ஸ்கி அறிவிப்பு

ரஷ்யாவில் நடக்கும் சந்திப்புகளை துல்லியமாக பகிரும் அமெரிக்கா! ஜெலென்ஸ்கி அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026