குடியேற்றவாசிகளுக்கான அமெரிக்காவின் புதிய அறிவிப்பு!
அமெரிக்காவில் எச்1 பி விசா, கிரீன் கார்டு நடைமுறைகளை மேம்படுத்த அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கரீன் ஜீன் பியர் இதனை தெரிவித்துள்ளார்.
எச்1 பி விசா
அமெரிக்காவில் உள்ள நிறுவனங்கள், வெளிநாட்டு பணியாளர்களை பிரத்யேக திறமை தேவைப்படும் ஒருசில பதவிகளில் பணியமர்த்தி கொள்ள அமெரிக்கா வழங்கும் ஒரு குறுகிய கால அனுமதியே எச்1 பி விசா ஆகும். எனினும், இந்த விசா குடியுரிமைக்கான அனுமதி அல்ல.
இதனால் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த விசா புதுப்பிக்கப்பட வேண்டும்.
சட்டவிரோத குடியேற்றம்
இந்த நிலையில், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுவதற்கான சாத்தியக்கூறுகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கரீன் ஜீன் பியர்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “பைடன் தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் அமெரிக்காவில் எச்1 பி விசா, கிரீன் கார்டு நடைமுறைகள் மேம்படுத்தப்படவுள்ளன.
சட்டப்பூர்வ குடியேற்றங்கள்
அத்துடன், குடியேற்ற அமைப்பின் ஒருமைப்பாட்டை வலுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் ஒரு பகுதியாக உள்நாட்டு பாதுகாப்புத்துறை எச்1பி விசா தொடர்பான புதிய விதியை வெளியிட்டுள்ளது.
எச்1பி விசா, கிரீன் கார்டு மற்றும் நாட்டின் சட்டப்பூர்வ குடியேற்றங்கள் தொடர்பான சிக்கல்களை நிவர்த்தி செய்ய பைடன் நிர்வாகம் அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |