அதிரடி மாற்றம் கண்ட டொலர் பெறுமதி
இன்றைய நாளுக்கான (25.6.2026) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 332.3416 ரூபாயாகவும், விற்பனை விலை 342.0372 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
நாணயமாற்று விகிதம்
நேற்று (24) வெளியிடப்பட்ட மாற்று விகிதங்களின்படி, கொள்வனவு விலை 330.3515 ரூபாயாகவும், விற்பனை விலை 340.0685 ரூபாயாகவும் பதிவாகியிருந்தது.

ஸ்ரேலிங் பவுண் (pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 436.59 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 451.81 ஆகவும் பதிவாகியுள்ளது.
யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 376.23 ஆகவும் விற்பனைப் பெறுமதி 389.95 ஆகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய (Canada) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 232.10 ஆகவும் விற்பனைப் பெறுமதி 241.41 ஆகவும் பதிவாகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
4 நாட்கள் முன்