உத்தராகண்ட் சுரங்கப் பாதையில் சிக்கியோர் மீட்பு : 17 நாள் விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி!
உத்தராகண்ட் மாநிலத்தின் சில்க்யாரா சுரங்கத்தில் கடந்த 17 நாட்களாக சிக்கியிருந்த 41 தொழிலாளர்களும் இன்று (28) மீட்கப்பட்டுள்ளனர்.
தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரால் இந்த மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த மீட்பு பணிகளின் அபார வெற்றியை முழு இந்தியாவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருவதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மீட்பு பணிகள்
இந்த சுரங்கத்திற்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளுக்கான குழாய் பதிக்கும் பணிகள் நிறைவடைந்து விட்டதாக, அந்த மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி இன்று பகல் தெரிவித்திருந்தார்.
அரசியலமைப்பு பேரவை மீது ஒடுக்கு முறையைப் பிரயோகிக்கும் ரணில் : குற்றம் சாட்டியுள்ள சட்டத்தரணிகள் சங்கம்!
அத்துடன், இடிந்து விழுந்த சில்க்யாரா சுரங்கம் இறுதியாக உடைக்கப்பட்டு விட்டாதாகவும் கூறியிருந்தார்.
மீட்கப்பட்ட தொழிலாளர்கள்
இவ்வாறான மீட்புப் பணிகளின் முன்னேற்றம் காரணமாக குறித்த சுரங்கத்தில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்களும் இன்றைய தினம் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, ஒருவர் பின் ஒருவராக சுரங்கத்தில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்களும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
முதலாவது நபர் வெளியே வந்த போது, சுரங்கத்தின் வெளியே காத்திருந்த மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளா்கள், உறவினர்கள், பொதுமக்கள், ஓட்டுநர்கள் என அனைவரும் கைகளைத்தட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
தொழிலாளர்களை வரவேற்ற புஷ்கர் சிங் தாமி
இதையடுத்து, சுரங்கத்தில் இருந்து வெளியே வந்த தொழிலாளர்கள் ஒவ்வொருவரையும், புஷ்கர் சிங் தாமி மாலை அணிவித்து ஆரத்தழுவி வரவேற்றுள்ளார்.
இதனை தொடர்ந்து, அவர்களுக்கான அடிப்படையான முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளதோடு, மருத்துவக் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |