ஆளுங்கட்சி எம்.பியின் மறைவு : வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவி
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் ஜயவீரவின் (Kosala Nuwan) திடீர் மரணத்தால் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகியுள்ளது.
இது குறித்து நாடாளுமன்றத்தால் தேர்தல் ஆணைக்குழுவிற்கு (Election Commission) அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு
அதன்படி, அரசியலமைப்பின் 66(அ) பிரிவின் விதிகளின்படி, 2025 ஏப்ரல் மாதம் 06ஆம் திகதி முதல் பத்தாவது நாடாளுமன்றத்தில் ஒரு இடத்திற்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக, நாடாளுமன்றத்தின் பதில் பொது செயலாளர் சமிந்த குலரத்ன, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் நேற்று (06) திடீர் மாரடைப்பு காரணமாக தமது 38 வயதில் காலமானார்.
இந்த நிலையில் அவருடைய மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
