கைதிகளிற்கு மன்னிப்பே கிடையாதா? ஆர்ப்பாட்டத்தில் லெனினிசக் கட்சி!
அனைத்து அரசியல்கைதிகளையும் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யக்கோரி புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியினால் ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக இன்று காலை 10 மணியளவில் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஆர்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம், புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் முக்கியஸ்தர்களான,நி.பிரதீபன்,டொன்பொஸ்கோ கட்சி உறுப்பினர்கள், ஈ.பீ.ஆர்.எல்.எவ் மத்திய குழு உறுப்பினர்களான கே.அருந்தவராயா,ரேகன் புதிய அரச பொது ஊழியர்சங்கத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசியல் கைதிகளிற்கு மன்னிபே கிடையாதா, கைதிகளை விடுதலைசெய், முஸ்லீம்களின் ஜனாசாக்களை எரிக்காதே, காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டங்களிற்கு பதில் என்ன போன்ற கோசங்களை எழுப்பியிருந்ததுடன், பதாதைகளையும் தாங்கியிருந்தனர்.








