வெடுக்குநாறி ஆலயநிர்வாகத்தினர் TID யில் முன்னிலை
வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தின் முன்னாள் தலைவர் மற்றும் செயலாளர் விசாரணைக்கு முன்னிலையாகியுள்ளனர்.
இதனடிப்படையில், பயங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவில் இன்று (09) அவர்கள் விசாரணைக்காக முன்னிலையாகியுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், நெடுங்கேணி வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தின் முன்னாள் தலைவர் செ.சசிகுமார் மற்றும் செயலாளர் து.தமிழ்ச்செல்வன் ஆகியோருக்கு விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
தடுப்பு விசாரணை
குறித்த அழைப்பு வவுனியா பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவு காவல்துறையினரால் (ரிஐடி) கடந்த இருதினங்களுக்கு முன்பாக விடுக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து குறித்த இருவரும் வவுனியாவில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவின் அலுவலகத்தில் இன்றையதினம் (09) காலை முன்னலையாகியுள்ளனர்.
பல விடயங்கள்
இதன்போது, அவர்களிடம் ஆலயம் தொடர்பாகவும் மற்றும் ஏனைய பல விடயங்கள் தொடர்பாகவும் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளது.
இந்தநிலையில், விசாரணைகைளை அடுத்து ஊடகங்களுக்கு அவர்கள் கருத்து வழங்கியுள்ளனர்.
விக்கிரகங்கள்
இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில், “குறித்த விசாரணையின் போது எமது ஆலயம் சார்ந்த விடயங்களையும் மற்றும் எமது தனிப்பட்ட தகவல்களையும் கேட்டிருந்தனர்.
நாம் அனைத்திற்கும் பதில் அளித்திருந்தோம் அந்தவகையில் மதம் சார்ந்த பணிகளை முன்னின்று மேற்கொள்பவர்களை அச்சுறுத்தி நசுக்கும் செயற்பாடாகவே இதனை பார்க்க வேண்டியுள்ளது.
குறிப்பாக எமது ஆலயத்தின் விக்கிரகங்கள் உடைக்கப்பட்ட விடயம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில் எங்களை மாத்திரம் தொடர்ச்சியாக விசாரணை செய்கின்றனர்” என தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
