தமிழர் பகுதியில் சிக்கிய ஒருதொகை முதிரைக்குற்றிகள்: வாகன சாரதி தப்பிஓட்டம்
வவுனியாவில் (Vavuniya) சட்டவிரோதமாக கடத்திச்செல்லப்பட்ட ஒருதொகை முதிரைக்குற்றிகள் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த சம்பவம் இராசேந்திரங்குளம் பகுதியில் நேற்று (10.04.2025) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், நேற்று (10) காலை வவுனியா - மன்னார் வீதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பூவரசங்குளம் காவல்துறையினர் வாகனம் ஒன்றை வழிமறித்துள்ளனர்.
சட்டவிரோதமாக வெட்டப்பட்ட மரக்குற்றிகள்
இதன்போது குறித்த வாகனம் காவல்துறையினரின் சைகையை மீறி நிறுத்தாமல் சென்றுள்ளது.
இதனையடுத்து, காவல்துறையினர் அந்த வாகனத்தை துரத்திச்சென்றுள்ள நிலையில் அதிவேகமாக சென்ற வாகனம் இராசேந்திரங்குளம் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
அதனை செலுத்திய சாரதி உட்பட இருவர் தப்பிச்சென்றுள்ளதாக தெரிவித்த காவல்துறையினர் அதிலிருந்த ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான சட்டவிரோதமாக வெட்டப்பட்ட முதிரைமரக்குற்றிகளை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், தப்பிச்சென்றவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கையினை பூவரசங்குளம் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
