அரச அதிகாரிகளுக்கான வாகன அனுமதி - எழுந்துள்ள சிக்கல்
அரச சேவையின் மூத்த அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட வரியில்லா வாகன அனுமதிகள், எதிர்வரும் பாதீட்டில் மீண்டும் வழங்கப்பட வாய்ப்பில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே வழங்கப்பட்ட சுமார் 23,000 அதிகாரிகளுக்கான அனுமதிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அதே நேரத்தில் மேலும் அதிகாரிகள் இந்த வசதிக்குத் தகுதி பெறுகின்றனர்.
வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள்
எனினும், சர்வதேச நாணய நிதியம் நிர்ணயித்த இலக்கான - ஆண்டு இறுதிக்குள் 7 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு இருப்பு இலக்கை அடைவதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இந்த வசதியை நிறுத்தி வைப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதற்கு அமைய, 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஓகஸ்ட் மாதம் வரையிலான 8 மாத காலப்பகுதியில் நாட்டிற்குள் வாகன இறக்குமதிக்காக 1,007.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட 2025 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்திற்கான வெளிநாட்டு பிரிவு செயல்திறன் அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஒரே மாதத்தில் அதிகபட்ச வாகன இறக்குமதி செலவு கடந்த ஓகஸ்ட் மாதம் பதிவாகியுள்ளதாகவும் அதற்காக 255.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
