இரண்டாவது நாளாக தொடரும் வன்முறை! பாரிஸில் தொடர் பதற்றம்
தாக்குதல்
பாரிஸ் நகரின் குர்திஷ் சமூகத்தின் மீது வெள்ளிக்கிழமையன்று நடந்த கொடூரமான தாக்குதலுக்குப் பிறகு, பாரிஸில் காவல்துறையினருக்கும் குர்திஷ் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே இரண்டாவது நாளாக பாரிய போராட்டம் தொடர்ந்து வருகிறது.
சனிக்கிழமை திரண்ட எதிர்ப்பாளர்கள் கார்களை கவிழ்த்தனர், சிலவற்றை தீ வைத்து எரித்தனர், மற்றும் பொருட்களை காவல்துறையினர் மீது வீசினர். இதற்கு பதிலளித்த அதிகாரிகள் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
சில ஆர்ப்பாட்டக்காரர்கள் சதுக்கத்தை விட்டு வெளியேறியபோது மோதல்கள் வெடித்தன, கண்ணீர் புகைக்குண்டு மூலம் பதிலளித்த காவல்துறையினரை நோக்கி எறிகணைகளை வீசினர். போராட்டக்காரர்கள் கலைந்து செல்லும் வரை சுமார் இரண்டு மணி நேரம் சண்டை தொடர்ந்தது.
தாக்குதலில் மூன்று பேர் உயிரிழப்பு
குர்திஷ் கலாச்சார மையம் மற்றும் உணவகம் ஒன்றில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். தன்னை இனவாதி என வர்ணித்த சந்தேக நபர், மனநல காப்பகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
69 வயதான அவர் சனிக்கிழமை பரிசோதனையைத் தொடர்ந்து உடல்நலக் காரணங்களுக்காக காவலில் இருந்து விடுவிக்கப்பட்டதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். மேலும் அவர் இன்னும் நீதிபதி முன் முன்னிலையாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் பெரிய சப்பரம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 நாள் முன்
