யாழில் பெரும் குற்றமொன்றுக்கு தயாராகியிருந்த மூவர் அதிரடி கைது!
யாழ்ப்பாணத்தில் தாக்குதல் நடாத்துவதற்காக கூரிய ஆயுதங்களுடன் தயார் நிலையில் இருந்த வன்முறை கும்பல் ஒன்றை சேர்ந்த மூவரை சுன்னாகம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அதில் இருவரிடம் இருந்து போதை மாத்திரைகளையும் கைப்பற்றியுள்ளனர்.
புன்னாலைகட்டுவான் பகுதியில் வன்முறை கும்பல் ஒன்றை சேர்ந்த மூவர் கூரிய ஆயுதங்களுடன் தாக்குதலுக்கு தயாராக இருப்பதாக சுன்னாகம் காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மூவரையும் கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணை
கைது செய்யப்பட்ட மூவரிடம் இருந்தும் மூன்று வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவர்களில் இருவரிடம் இருந்து போதை மாத்திரைகளையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை சுன்னாகம் காவல்நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |