அஸ்வின் ஒரு விஞ்ஞானி - ஆச்சரியமூட்டிய முன்னால் வீரரின் டுவிட்
பங்களாதேஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது அஸ்வின் - ஷ்ரேயஸ் ஐயர் உடைய இணைப்பாட்டமே.
இந்த சூழலில் அஸ்வினை 'விஞ்ஞானி' என சொல்லி டுவிட் செய்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக்.
இந்திய அணி
பங்களாதேஸத்தின் டாக்கா நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் 145 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.
தொடக்கம் முதலே இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து வந்த நிலையில் 74 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அப்போது அஸ்வின் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் இணைந்து வலுவான இணைப்பாட்டத்தை ஏற்படுத்த இந்திய அணி வெற்றி இலக்கை அடைந்தது.
அஸ்வின்
இருவரும் 8-வது விக்கெட்டிற்கு 71 ஓட்டங்கள் இணைப்பட்டம் அமைத்திருந்தனர். அஸ்வின், இரண்டாவது இன்னிங்ஸில் 62 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். இதில் 4 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.
இந்தப் போட்டியில் மொத்தம் 6 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றி இருந்தார். முதல் இன்னிங்ஸில் 12 ரன்கள் எடுத்திருந்தார். இதன் மூலம் அவர் ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.
இந்த சூழலில்தான் சேவாக், அஸ்வின் குறித்து டுவிட் செய்துள்ளார்.
"அருமையான இன்னிங்ஸ் ஆடினார் அஸ்வின். ஷ்ரேயஸ் ஐயருடன் அற்புதமான கூட்டணியும் அமைத்தார். இதை செய்தது விஞ்ஞானி. எப்படியோ இது கிடைத்துவிட்டது" என சேவாக் டுவிட் செய்துள்ளார்.
இந்த தொடரை இந்திய அணி 2-0 என வெற்றி பெற்றுள்ளது. இந்த டுவிட் சுமார் 1 மில்லியன் பார்வையை பெற்றுள்ளது.
The scientist did it. Somehow got this one. Brilliant innings from Ashwin and wonderful partnership with Shreyas Iyer. pic.twitter.com/TGBn29M7Cg
— Virender Sehwag (@virendersehwag) December 25, 2022
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் பெரிய சப்பரம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 நாள் முன்
