சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை : அவுஸ்ரேலியாவிலிருந்து வந்த அறிவிப்பு
Parliament of Sri Lanka
Mahinda Yapa Abeywardena
Dayasiri Jayasekara
By Sumithiran
ஐக்கிய மக்கள் சக்தியால் சபாநாயகருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தானும் ஆதரவாக வாக்களிக்கப் போவதாக சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகம் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
தற்போது அவுஸ்திரேலியாவில் தங்கியுள்ள ஜெயசேகர, அங்கிருந்து ஊடகமொன்றுக்கு விசேட அறிக்கை ஒன்றை விடுத்து இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பல சந்தர்ப்பங்களில் பக்கச்சார்பாக செயற்பட்ட சபாநாயகர்
சபாநாயகர் பல சந்தர்ப்பங்களில் பக்கச்சார்பாக செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஜெயசேகர, நம்பிக்கையில்லா விவாதத்தில் உண்மைகளை வெளிப்படுத்த தான் செயற்படுவார் எனவும் சுட்டிக்காட்டினார்.
இந்த விவாதத்தில் வெளிப்படுத்தப்படாத பல அசாதாரண உண்மைகளை தாம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளதாகவும் ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி